பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
பூராட்டாதி 4 ம் பாதம் : ஞானக்காரகனான குரு பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, சமூகத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் நிலையில் சில மாற்றங்களை உண்டாக்கும் மாதமாகும். ராசிக்குள் ராகு, ஏழில் கேது, விரயத்தில் சனி என நெருக்கடிகளை உண்டாக்கினாலும், 3ல் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனின் பார்வைகள் 7, 9, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். திருமண வயதினருக்கு வரன் அமையும். பெரியோரின் ஆசி, தெய்வ அனுகூலம் உண்டாகும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பணம் பலவழிகளிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். சுபிட்சங்கள் அதிகரிக்கும். தொழில், பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணவரவுகள் இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு புதிய இடம் வாங்கும் நிலை உண்டாகும். அரசியல்வாதிகள் நிதானம் காப்பது நல்லது. விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தினரையும் வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். மாணவர்கள் விடாமுயற்சி, கூடுதல் கவனம் செலுத்துவதால் மேற்கல்வி முயற்சி நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 21
அதிர்ஷ்ட நாள்: மே 30, ஜூன் 3, 12
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: கர்மக்காரகனான சனி, ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் தடைகளை சந்தித்து வருபவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்களுக்கு மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில், ராசிநாதன் மறைவு ஸ்தானமான 3ல் சஞ்சரிக்கும் நிலையில் யோசிக்காமல் செலவுகள் செய்து சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். என்றாலும், வாரத்தின் முற்பகுதியில் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் பணத்தேவையை பூர்த்தி செய்வார். பொன், பொருட்களை வாங்க வைப்பார். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகத்தை வழங்குவார். 3ல் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். குருவின் பார்வைகளால் உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் சுபிட்சம் தோன்றும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். கடன்கள் அடைபடும். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோயில்களுக்கு சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு திருமண யோகம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: மே 22
அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30, ஜூன் 3, 8, 12
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
ரேவதி: கல்விக்காரகனான புதன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் சிந்தித்து செயல்படக் கூடியவராக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் செயல்களால் முன்னேற்றம் அடையும் மாதமாக இருக்கும். 3ல் சஞ்சரிக்கும் சூரியன் மாதம் முழுவதும் நன்மை வழங்குவார். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசு வழி செயல்களை நிறைவேற்றித் தருவார். உங்களை வேகமாக செயல்பட வைப்பார். குருவின் பார்வைகளால் பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும், வீடு வாசல், சொத்து சுகம் உண்டாகும். பெண்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். குருவின் பார்வையால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பார். திருமண வயதினருக்கு மாங்கல்ய யோகம் உண்டாகும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் அவசர முடிவுகளை மேற்கொள்வதால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 23, 24
அதிர்ஷ்ட நாள்: மே 14, 21, 30. ஜூன் 3, 5. 12. 14
பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளை வழிபட நன்மை உண்டாகும்.