Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : ஐப்பசி ராசி பலன் மகரம் : ஐப்பசி ராசி பலன் மகரம் : ஐப்பசி ராசி பலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (16.11.2024 முதல் 15.12.2024 வரை)
தனுசு : ஐப்பசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
தனுசு : ஐப்பசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

15 அக்
2024
05:10

தனுசு: மூலம்.. உதவுவதில் முன்னிலை வகிக்கும் குணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் இந்த மாதத்தில் உங்களை விட்டு விலகும். உங்கள் ராசிநாதன் 6 ம் இடத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் இனி நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகுவர். 3 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இனி உங்கள் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பொருளாதார வரவு திருப்தி தரும். விலகிச் சென்ற உறவினர் உங்களைத்தேடி வருவர். வழக்கு விவகாரம் சாதகமாகும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் வரவு திருப்தி தரும். மாதத்தின் முதல் வாரத்தில் சில நெருக்கடி ஏற்படும். விவசாயிகள் தங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழிலில் இருப்பவர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு அக் 25 வரை யோகமாக இருக்கும் அதன் பிறகு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த நெருக்கடி விலகி லாபம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: அக் 24, 25

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 30. நவ 3, 7, 12, 

விநாயகருகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.


பூராடம்: உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதிலும், பிறருக்கு வழிகாட்டுவதிலும் முதன்மையானவராக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். உங்கள் நட்சத்திர நாதன் மாதம் முழுவதும் யோக பலன்களை வழங்கிட இருப்பதால் பல வகையிலும் வரவு உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள், புதிய வாகனம் சேரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். குடும்பத்திலிருந்த நெருக்கடி விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் அரசு வழி முயற்சி லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு  உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு திறமைக்கேற்ற முன்னேற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்கும். விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணை இக்காலத்தில் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார்.  நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அக்கறையும் பிற்பகுதியில் அலட்சியமும் ஏற்படலாம். இந்த நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 25, 26.

அதிர்ஷ்ட நாள்: அக் 15, 21, 24, 30. நவ 3, 6, 12, 15.

பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.


உத்திரம் 1 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டும் திறமையும் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் உங்கள் பாக்யாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி எல்லாம் ஆதாயத்தை ஏற்படுத்தும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகனின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கையும் புதிய வாகனம் வாங்கும் முயற்சியும் வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செயல்களில் இருந்த தடை  விலகும். உடல்நிலை முன்னேற்றமடையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். வாழ்க்கைத் துணை உங்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உறவினரிடம் இருந்த மனக்கசப்பு விலகும். எதிர்பார்ப்பு எதிர்பார்த்தபடி பூர்த்தியாகி சந்தோஷம் அடைவீர். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 26

அதிர்ஷ்ட நாள்: அக். 19, 21, 28, 30. நவ 1, 3, 10, 12.

பரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை உண்டாகும்.

 
மேலும் கார்த்திகை ராசி பலன் (16.11.2024 முதல் 15.12.2024 வரை) »
temple news
அசுவினி; திறமையாக செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மைகள் நிறைந்த மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்;  நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; அறிவும் துணிவும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்;  திடமான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு ... மேலும்
 
temple news
மகம்:  எங்கும் முதன்மையை விரும்பும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar