Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : ஐப்பசி ராசி பலன் மீனம் : ஐப்பசி ராசி பலன் மீனம் : ஐப்பசி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கும்பம் : ஐப்பசி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பம் : ஐப்பசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

15 அக்
2024
05:10

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்:எந்த ஒரு நிலையிலும் சங்கடப்படாமல் தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம சனியின் தாக்கம் உங்களுக்கு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். அஷ்டம கேதுவின் சஞ்சாரம் உங்கள் நிலையில் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி  நீங்கும். போட்டியாளர்கள் பலமிழப்பர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. தலைமையை அனுசரித்துச் செல்வதால் நல்லது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிதானமாக செயல்பட வேண்டும்.  ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்னை தேடிவர வாய்ப்பிருப்பதால் அமைதியாக, வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தி வருவது மட்டுமே இக்காலத்தில் நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 29, 30.

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26, 27. நவ 8, 9

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட இன்னல் தீரும்.


சதயம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் ஏற்படும். வருமானத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சங்கடம் தோன்றும். உங்களுடைய செல்வாக்கிற்கும் அந்தஸ்திற்கும் குறைவு ஏற்படுகிற நிலை உண்டாகும். இந்த நேரத்தில் நவ 4 ல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செய்து வரும் தொழிலில் நெருக்கடி உண்டாகும். உங்களுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் விலகிச் செல்லும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் எப்போதும், ஏதாகிலும் ஒரு பிரச்னை உண்டான படி இருக்கும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். எல்லாவிதமான சங்கடங்களையும், நெருக்கடிகளையும் வெற்றி கொள்ள முடியும். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அக் 25 முதல் புதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். நவ 8 முதல் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

சந்திராஷ்டமம்: அக் 30, 31

அதிர்ஷ்ட நாள்: அக் 22, 26. நவ 4, 8, 13.

பரிகாரம்: காளியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நீதி நேர்மை நியாயத்தையும் மனதில் கொண்டு வாழும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் உங்கள் வாழ்வில் புதிய பாதையைக் காட்டும் மாதம். உங்கள் நட்சத்திரநாதன் 4 ம் இடத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் அவருடைய பார்வைகளின் பலன்களும் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்காமல் போகும். அதே நேரத்தில் அக் 24 முதல் ஆற்றல் காரகனான செவ்வாய் பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்திடக்கூடிய சக்தி ஏற்படும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, போட்டி விலகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் பலமிழப்பார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு ஏதாகிலும் ஒரு வகையில் நெருக்கடியை வழங்கிக் கொண்டிருப்பர். பொருளாதார ரீதியாக தடை உண்டாகும். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத தடை ஏற்படும். எதை நீங்கள் பலமாக நினைத்து செயல்பட்டு வந்தீர்களோ அவற்றில் பின்னடைவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் சங்கடம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி தோன்றும்.  புதன் உங்களைப் பாதுகாப்பார். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 31

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 26, 30. நவ 3, 8, 12.

பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar