பதிவு செய்த நாள்
14
நவ
2025
01:11
பிறர் நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செயலில் தடுமாற்றம் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். இதற்கு முன்பிருந்த இயல்பு நிலை இப்போது இல்லாமல் போகும். வேலையில் பிரச்னை தலைகாட்டும். வியாபாரத்தில் உங்களின் திட்டங்கள் இழுபறியாகும். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாய் டிச. 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். விஐபிகள் உங்களுக்கு உதவி புரிவர். பெற்றோர் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களுக்கு வழிகாட்டுவதற்கு நல்ல நண்பர்கள் இந்த நேரத்தில் உங்களுடன் தோள் கொடுப்பர். கடன் தொல்லை, வம்பு வழக்கு, பிரச்னைகள் என்றிருந்த நிலை அனைத்தும் மாறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் இந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் சங்கடம் உங்களை நெருங்காமல் போகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எல்லா நிலையிலும் உங்களைப் பாதுகாப்பார். ஆரோக்யத்துடன் தலை நிமிர்ந்து நடை போட வைப்பார்.
சந்திராஷ்டமம்: நவ. 17. டிச. 15
அதிர்ஷ்ட நாள்: நவ. 21. 30. டிச. 3, 12
பரிகாரம் மாரியம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழும் உங்களுக்கு கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் செலவுகளை அதிகரிப்பர். எதிர்பாராத செலவு தோன்றும். கையில் பணம் வருவதற்கு முன்னதாகவே செலவு காத்துக் கொண்டிருக்கும். அனைத்திலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கையில் இருக்கும் பணத்தை பூமி, தங்கத்தின் மீது முதலீடு செய்வது நன்மை தரும். வசிக்கும் வீட்டை உங்கள் விருப்பத்திற்கேற்ப புதுப்பிக்கலாம். வியாபாரத்தில் அதிகபட்ச கவனம் தேவை. முதலீட்டிற்கேற்ற லாபம் கிடைக்காமல் போகும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் சச்சரவு உண்டாக வாய்ப்பிருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், விட்டுக்கொடுப்பதும் நலம் தரும். சிலருக்கு திடீரென வாகனம் பழுதாகி செலவை ஏற்படுத்தும். ஏதேனும் ஒரு வகையில் கையில் இருக்கும் பணம் கரையும். புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது என்ற வகையில் செலவு தோன்றும். அரசியல்வாதிகளுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. யாரையும் பகைக்காமல் அனுசரித்துச் செல்வதால் எதிர்மறை பலன் ஏற்படாமல் போகும். அதே நேரத்தில் சப்தமாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரத்தால் நவ. 27 வரை குடும்பத்தினர் உங்கள் மீது அன்பு செலுத்துவர். எந்த பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். நட்பு வட்டம் உங்களைப் பாதுகாக்கும். நவ. 27 முதல் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு கையில் பணப்புழக்கம் இருக்கும். உதவி எனக் கேட்பவர்களுக்கு தகுதி பார்த்து உதவுவீர்கள். நீண்டகால கனவு இந்த நேரத்தில் நனவாகும். உடல்நிலை சீராகும். ஆரோக்யம் மேம்படும்.
அதிர்ஷ்ட நாள்: நவ.17, 21, 26, 30. டிச. 3, 8, 12
பரிகாரம் அபிராமி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.
வார்த்தையில் கனிவும் செயலில் நிதானமும் கொண்டு வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு கார்த்திகை மாதம் யோகமான மாதம். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதன் டிச.6 வரை அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால், மறைந்த புதன் நிறைந்த செல்வங்கள் தருவார் என்பதற்கேற்ப வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்குவது போன்ற முயற்சிகள் நிறைவேறும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். டிச. 6 முதல் புத ஆதித்ய யோகம் உண்டாவதால் நீங்களே நம்ப முடியாத அளவிற்கு உங்கள் நிலை மாறும். கையில் பணம் புரளும். செல்வாக்கு உயரும். பணியாளர்களின் நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். நோய் நொடி, எதிர்ப்பு என்றிருந்த நிலைகளில் மாற்றத்தை உண்டாக்குவார். வழக்குகளை சாதமாக்குவார். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், பெரியவர்களின் ஆதரவை ஏற்படுத்துவார். கலைஞர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
அதிர்ஷ்ட நாள்: நவ.21, 23, 30. டிச. 3, 5, 12, 14
பரிகாரம் கூடல் அழகரை வழிபட குறை அனைத்தும் தீரும்.