அறுபதாம் கல்யாணத்தில் புதிய மாங்கல்யம் சூட்டுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2016 02:03
ஒருமனிதன் தான் பிறந்த தமிழ் வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றும் ஒன்று சேரும் நாளில் அறுபது வயது பூர்த்தியாகிறது. இதை புனர்ஜன்மமாகக் கருதியே சாஸ்திரங்களில் சாந்தி பரிகார ஹோமங்கள் செய்யும்படி சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவரது மனைவி தீர்க்காயுளும், சுமங்கலி பாக்கியமும் பெறவும், அந்த தம்பதிகள் நோய்நொடி இல்லாமல் சதாபிஷேகம் (80 வயதில் செய்வது) போன்ற மங்களங்களுடன் வாழவும் புதிய மாங்கல்யம் சூட்டப்படுகிறது.