ஈரோடு நகரில் பெரிய மாரியம்மன், சிறிய மாரியம்மன், வாய்க்கால்கரை மாரியம்மன் என மூன்று கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றை திரிசூல கோவில்கள் என்பர். இந்தக் கோவில்களின் அமைவிடங்கள் திரிசூல அமைப்பில் உள்ளது. இந்த தேவியருக்கு எலுமிச்சை மாலை சாத்தி வழிபடுவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அம்மை கண்டால் கோவிலைச் சுற்றிவலம் வருவது வழக்கம்.
அம்மை கண்ட குழந்தைகள் குணமாக, அவர்கள் மீது நெய் தடவி வாழை இலையில் கிடத்தி, வேப்பிலையால் தடவி விடுகிறார்கள். சொல்லித் தெரிவதில்லையே- நாங்கள் செய்தபிழை என்னவோ, தவிக்கின்ற முல்லைக் கொடிபோல்- நாங்களம்மா இதன் தரம் கண்டு உயிர் தருவாய் மாரியம்மா! வாடுகின்ற பிள்ளைகளைப் பாராயோ! வந்து எங்கள் குறைகளைத் தீராயோ! வாராயோ! வந்து தீராயோ! அம்மா! என்று பாடி பிரார்த்திப்பவர்களுக்கு அம்மனின் மனம் கரைந்து அருள் செய்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.