பெருமாள் கோயில்கள் திறக்கப்பட்டதும் முதலில் பாடப்படும் திருப்பல்லாண்டு (பெரியாழ்வார் எழுதியது) ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு இணையானது. இதையடுத்து பாடப்படும் மதுரகவியாழ்வார் எழுதிய கண்ணி நுன் சிறுத்தாம்பு என்ற நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் நமோ எனப்படும் சொல்லுக்கு விளக்கமாக உள்ளது. மூன்றாவதாகப் பாடப்படும் ஆண்டாளின் திருப்பாவை நாராயணய என்ற சப்தத்தின் விளக்கமாக கருதப்படுகிறது. ஓம் நமோ நாராயணாய என்று பக்தி பரவசத்தோடு சொன்னாலே போதும். இந்த மூன்றையும் நம் வாயால் சுவை பட பாடியதாக அர்த்தம். படிக்காதவர்களும் சுலபமாக இறைவனை வணங்க எளிமையான வழி.