பதிவு செய்த நாள்
30
ஆக
2016
03:08
தர்மிஷ்டை தம்பதியருக்கு மூன்று பெண்கள். குலம் விளங்கப் பிள்ளையில்லையே என்று தர்மிஷ்டை துக்கப்பட்டாள். விரதங்கள் மேற்கொண்டு, நான்காவதாக ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். பிறந்த குழந்தை அழவில்லை. மருத்துவரிடமும் கேட்டபோது உன் புதல்வனுக்குப் பார்வையும் கிடையாது. பேசும் திறனுமில்லை என்றார். பல வைத்தியங்கள் செய்தும் எந்தப் பலனுமில்லை. குழந்தையைக் காண வந்த உறவினர்களும் அது குறித்துக் கேட்டு நோகடிக்க, குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த தர்மிஷ்டை, குழந்தைக்குப் பாலூட்டாமல் விட்டு விட்டாள். குழந்தை பசியால் அழுது மெலிந்தது. ஐந்து நாட்களாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அரக்கி, தனது குழந்தையை அங்கே விட்டு விட்டு, மானிடக் குழந்தையைத் தூக்கி வந்து கணவனிடம் காண்பித்து, வா.... தின்னலாம் என்றாள்.
அரக்கன், கோஷாகரன் அதர்வண வேதம் கற்றவன். சித்து வேலைகளையும் அறிவான். நாளை நம் குழந்தையை நீ மீண்டும் எடுக்க முடியாதபடி செய்து விடுவான். இந்தக் குழந்தையை விட்டு விட்டு நம் குழந்தையை எடுத்து வந்துவிடு என்றான். அசுரக் குழந்தை பசியால் அழுதது. தர்மிஷ்டை ஓடி வந்து, குழந்தையைக் கட்டித் தழுவினாள். கணவன் வந்ததும், குழந்தைக்குக் குரல் வந்து விட்டது. கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கிறது என்றாள் களிப்புடன். குழந்தையை ஆராய்ந்த கோஷாகரன், குழந்தையின் உடலில் ஒரு ஆவி புகுந்து புலம்புகிறது. அதை ஒட்ட வேண்டும். கீழே விடு என்றான். பிறகு அதை மந்திரத்தால் கட்டினான். அரக்கி வந்தபோது அதை எடுக்க முடியவில்லை.
கோஷாகரன் குழந்தையின் குறைகளை குணப்படுத்திய அரக்கி, அதையும் அவனிடமே கொடுத்து, என் குழந்தையையும் நல்லபடியாக வளர்ப்பாயாக, என்று கூறிச் சென்றாள். தனது குழந்தைக்கு நிஷாதரன் என்றும், அரக்க செல்வனுக்குத் திவாகரன் என்றும் பெயர் சூட்டி வளர்த்தனர். திவாகரன் நன்கு படித்தான். நிஷாதரனுக்கு பூர்வ ஜன்ம வினையால் படிப்பு வரவில்லை. ஒருநாள் தர்மிஷ்டை இல்லாத நேரம், நிஷாதரனை ஒரு பாழடைந்த கிணற்றில் தள்ளி, சிறிது ஒளி வருமாறு மூடிவிட்டான் கோஷாகரன். கிணற்று நீரை அருந்தி, கந்தமூலங்களை உண்டு உயிர் வாழ்ந்தான் சிறுவன். பிள்ளையைக் காணாது தவித்த தர்மிஷ்டை, ஊரெங்கும் தேடிச் சேர்ந்தாள்.
பத்தாண்டுகள் சென்றன. தங்களின் மூன்று பெண்களையும் நல்ல படியாகத் திருமணம் செய்து கொடுத்தனர். ஒருநாள் தர்மிஷ்டை அந்தப் பாழடைந்த கிணற்றின் அருகே பச்சிலை பறித்துக் கொண்டிருந்தபோது, கிணற்றிலிருந்து குரல் வர, அவசர அவசரமாக அதன் மூடியைத் திறந்து உள்ளே பார்த்தாள். பதறியபடி புடைவையின் ஒரு முனையை கிணற்றில் விட, அதைப் பற்றிக்கொண்டு மேலேறி வந்தான் மகன். விரவமறிந்து, ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கணவனிடம் கேட்டபோது, அவனது பத்து வருடத் தவம் அவன் பாபங்களைக் கரைத்தது. இனி, அவன் கெட்டிக்காரனாக, அறிவாளியாக வாழ்வான் என்று பதிலளித்தார் கோஷாகரர்.