Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆன்மிகச் சுற்றுலா ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) காத்திருக்கு பதவி உயர்வு
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) காத்திருக்கு பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
05:06

நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் முக்கிய கிரகங்களில் 7- ல் இருக்கும் குரு அனுகூலம் தர காத்திருக்கிறார்.  உங்கள் ராசிக்கு 4- ல் இருக்கும்  சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன்  மிதுனத்தில் இருந்து முன்னேற்றம் தருவார். தற்போது மிதுனத்தில் இருக்கும் புதன், ஜூன் 24ல் கடகத்திற்கு மாறி நன்மை தருவார். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும்.

குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜூலை 5க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேலிடும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொருள் லாபம் அதிகரிக்கும். 

மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஜூன் 23,24ல்  பெண்கள்  உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 12,13ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூலை 2,3,4ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும்
கிடைக்கும். அதே நேரம் ஜூன் 16,17, ஜூலை 14,15ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு.  

பணியாளர்கள் சிறப்பான பலனை பெறுவர். அரசு ஊழியர்கள் ஜூன் 24 வரை சற்று கவனமாக இருக்கவும். சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்வர். அதன் பின் பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும்.

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். ஜூன் 24 க்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர்.

தொழிலதிபர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும்.  பொன், பொருள் சேரும். ஜூன் 24 வரை சற்று கவனமாக இருக்கவும். அரசு வகையில் பிரச்னை குறுக்கிடலாம். சிலர் சோதனைக்கு ஆளாகலாம். அதன் பின் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.  ஜூலை 5,6,9,10,11ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  ஜூன் 21,22ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறுவர்.

கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர்.  அரசியல்வாதிகள் சிறப்பான நிலையை அடைவர்.  சமூகநல சேவகர்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும். ஜூன் 18,19,20, ஜூலை 16ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 24 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கூடுதல் அக்கறை தேவை.  போட்டிகளில் சிரத்தை எடுத்தால் தான் வெற்றி கிடைக்கும். ஜூன் 24 க்கு பிறகு முன்னேற்றம் காண்பர்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலகட்டம்.

பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  அக்கம்பக்கத்தினரிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஜூலை 7,8ல் பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.

* நல்ல நாள்: ஜூன் 21,22,23,24,30,
ஜூலை 1,2,3,4,7,8,12,13  
* கவன நாள்: ஜூன் 25,26 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 3,9   நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
● சனி, ராகு,கேதுவுக்கு அர்ச்சனை
● அஷ்டமியில் பைரவருக்கு நெய்தீபம்
● செவ்வாயன்று ஏழைக்கு துவரை தானம்

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar