ஊழிக்காலம் வந்தது. பதினான்கு உலகங்களும் அழிந்தன. அடங்கின. மீண்டும் சூரியன் முன் மலரும் தாமரைப் போல் சிவபெருமான் முன் உலகங்கள் உற்பத்தியாயின. தேவர்களும், திருமால், பிரமன் முதலானோரும் உதித்தனர். படைப்புத் தொழில் தொடங்கியது.
அரபத்தர் பெரும் முனிவர். அவரிடம் பிற முனிவர்கள் வந்து, ""ஐயனே நாங்கள் வேதங்களைப் படித்தோம். ஆனால் அதன் பொருள் அறியாதிருக்கின்றோம் - என்றனர். அதற்கு அரபத்தர் வேதத்தின் பொருளை வேத வித்தான சிவபெருமானே கூறவேண்டும். அதை அவரிடம் இருந்து கற்க உரிய இடம் மதுரையே. அங்கு செல்வீர்! - என்றார்.
உடனே கண்ணுவர் முதலான முனிவர்கள் மதுரைக்கு வந்தனர். சோமசுந்தரனை வழிபட்டு கல்லால மரத்தினடியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை பணிந்தனர். இறைவனின் கருணை வெளிப்பட்டது. பதினாறு வயது அந்தணக் குரு வடிவத்தில் இறைவன் கண்ணுவர் முதலான முனிவர்களின் முதுகுகளில் நம் அருளாகிய திருக்கரத்தால் தடவிக் கொடுத்தார். பின் சிவலிங்கத்தினுள் ஐக்கியம் ஆனார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »