விக்கிரம பாண்டியனின் மகன் இராஜசேகரன் அரசனானான். அவன் பரதக்கலையைக் கற்கும்போது தமக்குச்சோர்வு ஏற்படுவது கண்டு அம்பலத்தில் ஆடும் இறைவனுக்கும் இவ்வாறு தானே சோர்வு ஏற்படும்! என்று எண்ணினான். ஆனாலும் திருக்கூத்தை நிறுத்த முடியுமா! நீண்ட சிந்தனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்தான்.
சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்றான். நான்கு யாமப்பூசை முடிந்தது. இறைவனைத் தொழுத பாண்டியன், ""இறைவா! ஊன்றிய திருவடியை மேலே எடுத்து வீசி தூக்கிய திருவடியை நிலத்தில் ஊன்றி கால் மாறி ஆட வேண்டும். இல்லையேல் நான் இங்கேயே இப்போதே உயிரை மாய்த்துக்கொள்வேன்! என வேண்டினான். இறைவனும் கால் மாறி ஆடினார். பாண்டியனின் விருப்பப்படி இன்னும் மதுரையில் வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடும் திருக்காட்சி நல்குகிறார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »