அனந்தகுண பாண்டியனின் மகன் குலபூஷண பாண்டியன் மதுரையை அரசாண்டு வந்தபோது சேதிராயன் என்னும் வேடர் தலைவர் பெரும் படையுடன் திகழ்ந்தான். அவன் பாண்டியனுடன் போர் புரியத் திட்டமிட்டிருந்தான். இதை அறிந்த குலபூஷணன், தளபதி சௌந்திர சாமந்தனை அழைத்து “பொக்கிஷத்திலிருந்து வேண்டிய அளவு பொருளை எடுத்துச் சென்று படை பலத்தை பெருக்கு! என்று ஆணையிட்டான்.
சிறந்த சிவபக்தனான தளபதி, ஏராளமான திரவியத்தை எடுத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றான். கோபுரம் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை கட்டுவதற்கே அத்தனை பணத்தையும் செலவிட்டான். பணம் கோவிலில் தண்ணீராய் செலவானதை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டியன் தளபதியை அழைத்து “புதிய படை என்னவாயிற்று?” என்று கேட்டான். தளபதியும் பல நாடுகளுக்கு ஓலை அனுப்பி இருப்பதாய் கூறி சமாளித்தான். என்றாலும் குலுபூஷண பாண்டியன் ”நாளை சூரியன் மறையும் முன் புதிய படை இங்கு வந்து விட வேண்டும்!” என்று இறுதிக்கட்டளை இட்டார்.
செய்வதறியாது திகைத்த சௌந்திர சாமந்தன் “நீயே கதி” என்று சொக்கலிங்கத்தைச் சரணடைந்தான். அபயம் என்று வந்தோரை அருளும் அவ்விறைவன், நாளை படை வீரர்களுடன் நாம் வருகிறேம். நீ பாண்டியனுடன் சபையில் இரு!” என்ற அசரீரி எழுப்பினார். அவ்வாறே
மறுநாள் சிவக்கணங்கள் படை வீரர்களாகவும் சிவபெருமான் படைத்தலைவராயும் வேடம் தாங்கிப் பெரும் படையாய் வந்து சேர்ந்தனர். அது கண்டு மகிழ்ந்தான் பாண்டியன். அதற்குள் ஓடி வந்த ஒற்றன். ‘சேதிராயன் புலியால் தாக்கப்பட்டு இறந்தான்! என்ற செய்தியைக் கூறினான். பகை ஒழிந்ததால் படை தேவை இல்லை என்று கருதிய பாண்டியன் வீரர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்பிவிடு” என்று தளபதியிடம் கூறியதும் அப்படை வீரர் மறைந்தனர். இது கண்டு திகைத்த பாண்டியன் இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்பதறிந்து நெஞ்சு உருகி நின்றான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »