தங்கள் தோல்வியால் சமண முனிவர்கள் சோர்ந்து விடவில்லை! சைவர்கள் பசுவைக் கொல்லமாட்டார்கள் என்ற முடிவில் மீண்டும் யாகம் செய்தார்கள். யாகத்தில் பசுவடிவத்துடன் மதுரையை அழிக்க அவனை அனுப்பினர். பயங்கர வடிவுடைய மாய அரக்கப் பசு மலைகள் அதிர மதுரையை நோக்கி ஓடி வந்தது. செய்தி அறிந்த பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். சோமசுந்தரக் கடவுள் நந்தி தேவனை அழைத்து “சமணர்களின் கொடிய பசுவை வென்று வா!” என்று ஆணையிட்டார். நந்திதேவன் கூற்றுவனைப் போல் பாய்ந்தோடினார். மாயப் பசுவிற்கும் நந்திக்கும் கொடுமையான போர் நெடுநேரம் நடந்தது. என்றாலும் பசுவைக் கொல்ல நந்திக்கு மனம் இல்லை. எனவே நந்தி தனது பேரழகைக் காட்டியது. மாயப் பசு அதன் மீது காமம் கொண்டது. அதன் இச்சை மிகவே உயிருடன் வீரியத்தையும் விட்டு கீழே வந்தது. உடனே அதன் உடல் மலை ஆயிற்று. இந்த நிகழ்ச்சியின் சான்றாக நந்திதேவர் தன் உடலை பசுமலையாக அங்கே விட்டு தன் ஆக்கும் சரீரத்துடன் இறைவனைச் சென்றடைந்தார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »