தனபதி என்னும் வணிகன் பெருஞ்செல்வந்தன். எனினும் பிள்ளைப்பேறற்றவன். தன் தங்கையின் மகனையே தத்து எடுத்து வளர்த்தார். ஒருமுறை தங்கை கோபத்துடன் அவனை ‘பிள்ளைப்பேறு அற்ற பாவி!” என்று கூறி விட்டான். அதனால் மனமுடைந்த தனபதி, ‘அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்கத் தவம் செய்வேன்’ என்று மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினான். நெடு நாட்கள் ஆகியும் அவன் வராததால் அவனது செல்வங்களை எல்லாம் தாயத்தார் கவர்ந்து கொண்டனர்.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கருதிய தளபதியின் தங்கை கோவிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிட்டு அழுதாள். கருணை கூர்ந்தார் சோமசுந்தரக்கடவுள். ‘நாளை தாயத்தாரை தரும சபைக்கு அழைத்து வா. நாமே வந்து வழக்காடி உனக்குரிய சொத்தை மீட்டுத்தருகிறோம்!” எனும் வான் ஒலி ஒலித்தது. அவ்வாறே மறுநாள் தருமசபையில் முறையிட்டு தாயத்தார்களை வரவழைத்தான். அப்போது சோமசுந்தரக் கடவுளே தளபதியின் உருவம் தாங்கி வந்து வழக்குரைத்து, ‘தம் சொத்துக்கள் அனைத்தும் தம் தங்கையின் மகனுக்கே உரியன!’ என்றார். தரும சபையினரும் அதனை ஏற்று தனபதியின் தங்கை மகனுக்கே சாசனம் எழுதினர். சாசனம் எழுதி முடிந்ததும் தனபதியின் உருவம் தாங்கி வந்த இறைவன் அனைவரும் காண மறைந்தார். வந்தது கடவுளே என்பதை சுந்தரேச பாதசேகர பாண்டியன் உணர்ந்து வணிகச் சிறுவனுக்குப் பரிசுகள் பல வழங்கி கௌரவித்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »