பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
அவிட்டம் 3,4 ம் பாதம்: தொழில்காரகனான சனி, தைரியக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த நீங்கள் உழைப்பால் உயரக் கூடியவர்களாக இருப்பீர்கள். வைகாசி மாதம் உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களை வழங்கும் மாதமாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி 3, 7, 10 ம் இடங்களைப் பார்ப்பதால் உங்கள் தைரியத்தில் குறைபாடு, வாழ்க்கைத்துணையுடன் பிரச்னை, நட்புகளுக்குள் சங்கடம், தொழிலில் முன்னேற்றமில்லா நிலை என்று சங்கடங்களை நீங்கள் சந்தித்து வரும் நிலையில் 4ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடி வந்தவர்களின் முயற்சி நிறைவேறும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 3 ல் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தடைபட்ட செயல்கள் நடந்தேறும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதால் விருப்பங்கள் நிறைவேறும். பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். வரவு செலவுகளில் எச்சரிக்கை வேண்டும். பெண்களின் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் மேற்கல்வி முயற்சியில் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: மே 19
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 25, 27, ஜூன் 8, 9
பரிகாரம்: அனுமனை வழிபட்டால் தடையனைத்தும் விலகும்.
சதயம்:யோகக்காரகனான ராகு, ஆயுள்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த நீங்கள், உழைப்பால் முன்னேற்றம் அடைவீர்கள். பிறக்கும் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நட்சத்திரநாதன் ராகு குடும்ப ஸ்தானத்திலும், ராசிநாதன் ஜென்மத்திலும், 8 ல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் என எல்லாவற்றிலும் இழுபறி இருக்கும். முதலீடுகள் தேக்கமடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும், 4 ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 8 ம் இடத்திலும், அங்கு சஞ்சரிக்கும் கேதுவின் மீதும் பதிவதால் உடல் பாதிப்பு நீங்கும். மறைந்த செல்வாக்கு மீண்டும் உயரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். 10 ம் இடத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 3ல் இருப்பதால் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்ப நலனில் கூடுதலாக அக்கறை செலுத்துவதுடன் உங்கள் உடல் நிலையிலும், வாழ்க்கைத்துணையின் உடல் நிலையிலும் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்கள் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 20.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 22, 26. 31, ஜூன் 4, 8, 13
பரிகாரம்: காளிகாம்பாளை மனதில் நினைத்து வழிபட சங்கடம் நீங்கும்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: தனக்காரகனான குரு, ஆயுள்காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்த நீங்கள் நினைத்ததை சாதிக்கும் திறமையுடன் இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் 4ல் சஞ்சரித்து ராசிக்கு அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களைப் பார்ப்பதால், இதுவரையில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். தொழிலில் தடைகள் நீங்கும். உடல் பாதிப்புகள் குறையும். விரயங்கள் கட்டுப்படும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 3ல் ஆட்சி பெறுவதால் முயற்சி யாவும் வெற்றியாகும். உழைப்பின் மீது அக்கறை உண்டாகும். பொருளாதாரம் உயரும். அதே நேரத்தில் ஜென்ம ஸ்தானத்தில் சனியும், வாக்கு ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதை மனதில் கொண்டு செயல்படுவதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. வியாபாரம் தொழிலில் இக்காலத்தில் கவனம் செலுத்துவதால் லாபம் கூடும். உத்தியோகம், வேலைகளில் விழிப்புணர்வு தேவை. பெண்கள் நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் இல்லாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியம்.
சந்திராஷ்டமம்: மே 21
அதிர்ஷ்ட நாள்: மே 17, 26, 30 ஜூன் 3, 8,12
பரிகாரம்: வியாழன் தோறும் குருபகவானை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.