சுய அனுபவத்தை படிப்பினையாக கொண்டு வாழ்வில் முன்னேறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் யோகமான மாதம். ராசிநாதன் குரு நவ.18 முதல் வக்கிரம் அடைவதால், வக்கிர குரு முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கக் கூடியவர் என்ற நிலையில் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திடீரென தடுமாற்றத்தை சந்தித்து சங்கடத்திற்கு ஆளாகும் நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும். மனதிற்கினிய சம்பவம் நடக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி நவ.17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் எடுக்கும் முயற்சி இனி வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். உடலில் இருந்த சங்கடம், பிரச்னைகள் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நோய்நொடி, வம்பு வழக்கு என சங்கடப்பட்ட நிலை மாறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் விளைச்சல் மீது கவனமாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 8, 9
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 25, 30. டிச. 3, 7, 12
பரிகாரம் ராஜ கணபதியை வழிபட சங்கடம் நீங்கும். நன்மை உண்டாகும்.
பூராடம்
நெருக்கடி வந்தாலும் அதை சிரித்துக் கொண்டே சமாளிக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதம். லாபாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். நீண்டநாள் கனவு நனவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களில் மனநிறைவும் எதிர்பார்த்த ஆதாயமும் கிடைக்கும். மற்றவர் பாராட்டும் வகையில் உங்களின் செயல்பாடு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தேடி வரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஊழியர் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திருமணம் கூடி வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். இந்த மாதம் உங்களுக்கு நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 9
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12
பரிகாரம் ரங்கநாதரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்
இன்றைய வாழ்வை பாடமாக கொண்டு எதிர்காலத்தை சுபிட்சமாக மாற்றும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான சூரியன் விரய ஸ்தானத்தில் மாதம் முழுதும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரும். ஆதரவாக இருந்த பெரியவர்களும் இந்த நேரத்தில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போவார்கள். விரயாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் டிச.6 வரை ஆட்சியாக இருப்பதால் இடம், வீட்டை விற்கும் நிலை சிலருக்கு ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் ஆயுள்காரகன் சனியும், யோக போகக்காரகன் ராகுவும் உங்களைப் பாதுகாப்பர். தொழில் நிறுவனம் நடத்துவோருக்கு எதிர்பார்த்தபடி பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி, உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஜீவனாதிபதி புதன் டிச.6 வரை லாப ஸ்தானத்தில் இருப்பதால் மன நிம்மதி இருக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். லாபாதிபதி சுக்கிரனும் மாதம் முழுதும் உங்களுக்கு நன்மை வழங்குவார். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன், பொருள் சேரும். என்ன நிலை எதிர் வந்தாலும் அதை சமாளிக்கக் சக்தி உண்டாகும். சிலர் உறவினர் இல்ல நிகழ்வுகளை முன்நின்று நடத்துர்.
சந்திராஷ்டமம்: டிச. 10
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 21, 28. டிச. 1, 3, 12
பரிகாரம் திருப்பதியை வழிபட வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2025 முதல் 15.12.2025 வரை) »