முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வாழும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதம். ஆத்ம காரகன் சூரியன் லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் இருப்பதால் உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். புதிய சொத்து, வாகனம் சேரும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முதலீடு வழியே லாபம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகளின் நிலை உயரும். அரசியல்வாதிகள், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கப் பெறுவர். குடும்பத்தில் நிலவிய பிரச்னை முடிவிற்கு வரும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளாக முயற்சி செய்தும் முடியாமல் போன வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். சிலர் கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றி மகிழ்வர். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த மாற்றமும் கிடைக்கும். புது வியாபாரம், தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பழைய வழக்குகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமம் குறையும். கணவன், மனைவி உறவு பலப்படும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: டிச. 10
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 19, 26, 28. டிச. 1, 8
பரிகாரம் பைரவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். வழக்கு சாதகமாகும்.
திருவோணம்
மனவலிமையுடன் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் யோகமான மாதம். உங்கள் பாக்கியாதிபதி புதன் டிச.6 வரை ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டில் குடியேறுவர். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை எல்லாம் இடம் தெரியாமல் போகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது இருப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் வளர்ச்சியைக் கண்டு சிலர் பொறாமையின் காரணமாக உங்களைப் பற்றி அவதுாறு பரப்பும் நிலை வரலாம். சுய ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் பொருளாதார நிலையை உயர்த்துவர். நிதானமான வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். என்றோ செய்த முதலீட்டில் இருந்து இந்த நேரத்தில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பு வெற்றி பெறும். லாப ஸ்தான சூரியனால் அரசுவழி முயற்சி, நீண்டநாள் கனவு நிறைவேறும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு தடைபட்ட பணம் வரும். நவீன பொருள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமையும் பிள்ளைகளின் மீது அக்கறையும் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 11
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29. டிச. 2, 8
பரிகாரம் ஸ்ரீராமரை வழிபட வாழ்வில் இழந்த யாவும் கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்
தன்னம்பிக்கை, துணிச்சல் கொண்டு வாழ்வில் முன்னேறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும் லாபாதிபதியும், பூமி காரகனுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் டிச.6 வரை ஆட்சியாக இருப்பதால் உங்களுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். வீடு, மனை, தொழில் அமையும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருந்தகம், ஓட்டல், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த பொருட்களின் விற்பனை வருமானத்தைக் கொடுக்கும். காவல்துறை, தீயணைப்புத்துறை ஊழியர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற வேலைகள் நடக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். தொழிலை விரிவு செய்யக் நிலை சிலருக்கு ஏற்படும். பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்தும் கிடைக்காத சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உடல் பாதிப்பு விலகி சுறுசுறுப்பாக செயல்படும் நிலை உண்டாகும். தொழில் வளர்ச்சி பெறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சூரியன் மாதம் முழுதும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் அரசுவழி வேலைகள் சாதகமாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும்.
சந்திராஷ்டமம்: டிச. 12
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9
பரிகாரம் அனுமனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2025 முதல் 15.12.2025 வரை) »